தமிழக ரேஷன் கடைகளில் 6,503 பணியிடங்கள் – நேர்காணல் அழைப்பு கடிதம் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மாதம் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6,503 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பித்தோர்களுக்கான நேர்காணல் அழைப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
நேர்காணல் அழைப்பு:
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதில் 5,578 விற்பனையாளர் மற்றும் 925 கட்டுநர் என மொத்தம் 6503 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகையும் அளிக்கப்பட்டது.
இப்பணிக்கு கடந்த 14ம் தேதி மாலை 5 மணி வரை பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தற்போது வரை ரேஷன் கடைகளில் உள்ள 6,503 பணியிடங்களுக்கு 2,29,807 பேர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக ரேஷன் கடை பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு…
சென்னை – Click here
திண்டுக்கல் – Click here
கள்ளக்குறிச்சி – Click here
திருவாரூர் – Click here
திருவண்ணாமலை – Click here
விழுப்புரம் – Click here
0 comments:
Post a Comment