8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.62000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

மதுரை மாவட்டம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை அலகு, அரசுத்தலைப்பின்‌ கீழ்‌ பழங்குடியினர்‌ பிரிவில்‌ காலியாக உள்ள 1 (ஒன்று) ஈப்பு ஒட்டுநர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நிறுவனம் : மதுரை மாவட்டம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை

பணியின் பெயர் : ஈப்பு ஒட்டுநர்‌

பணியிடங்கள் : 01

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.11.2022

விண்ணப்பிக்கும் முறை : Offline

ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை காலிப்பணியிடங்கள்:

ஈப்பு ஒட்டுநர்‌ பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

ஒட்டுநர்‌ கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 8-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மோட்டார்‌ வாகனச்‌ சட்டம்‌ 1988 (மத்திய சட்டம்‌ 59/1988) -ன்‌ படி தமிழக அரசின்‌ தகுந்த அதிகாரியால்‌ வழங்கப்பட்ட தகுதியான ஒட்டுநர்‌ உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல்‌ மோட்டார்‌ வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம்‌ கொண்டவராக இருத்தல்‌ வேண்டும்‌.

வயது வரம்பு:

01.07.2022 அன்றுள்ளவாறு, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஊரக வளர்ச்சி பணிக்கான சம்பளம்:

ஈப்பு ஒட்டுநர்‌ – ரூ.19500 – ரூ.62000/-

ஈப்பு ஒட்டுநர்‌ விண்ணப்பிக்கும் முறை:

மதுரை மாவட்டத்தில்‌ வசிப்பவராக இருக்க வேண்டும்‌. விண்ணப்பதாரர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி, இருப்பிடம்‌ (ரேசன்‌ கார்டு மற்றும்‌ ஆதார்‌ காட்டு), சாதிச்சான்று முன்னுரிமை சான்று இதர சான்றிதழ்‌ நகலினை சான்றொப்பம்‌ பெற்று விண்ணப்பத்துடன்‌ இணைத்து அனுப்ப வேண்டும்‌. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி :

மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌(வளர்ச்சி),

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌(வளர்ச்சி பிரிவு),

மதுரை -20.

Download Notification 2022 Pdf

About Bala Krishnan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 comments:

Post a Comment